திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். திருமணம் செய்யும் முன் பல விஷயங்களை சிந்தித்து, செய்யப்படுகின்றது. இருமனங்கள் மட்டுமல்லாமல் இரு குடும்பமே இணையக்கூடிய பந்தம் என்பதால், திருமணத்திற்கு முன் திருமண பொருத்தம் பார்ப்பதை நாம் வழக்கமாக வைத்துள்ளோம்.
தன் பிள்ளைக்கு திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோர்கள், முதலில் செய்வது, பிள்ளையின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடரிடம் செல்வார்கள். மேலும் தரகர்களிடம் கொடுத்து தகுந்த வரன்களின் ஜாதகத்தை பெற்று ஜோதிடர்களிடம் திருமணப் பொருத்தங்கள் சரியாக உள்ளதா, இல்லையா என அறிந்து கொள்வர்.